'இந்த வயசுலேயே இதெல்லாம் கேக்குதா'...'மொத்த குடும்பமும் செத்து போங்க'... நடுங்க வைத்த சிறுமியின் பிளான்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 12, 2019 04:45 PM

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது பெற்றோர், அண்ணன்கள், சகோதரிகளுக்கு விஷம் வைத்த சிறுமியின் செயல் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Minor Girl Elopes With Boyfriend After Poisoning Family

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் என்பவரை காதலித்து வந்தார்.சிறுமிக்கு 18 வயது ஆகாத காரணத்தினால் இவர்கள் காதலை பெற்றோர் கண்டித்தனர். இதனிடையே கடந்த ஆண்டு தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அரவிந்த்குமார் மீது சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த வழக்கில் சிறை சென்ற அரவிந்த்குமார், தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அரவிந்த்குமார், எங்கள் காதலை எதிர்த்தால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டும் என மிரட்டல் விடுத்தார். இந்தப் பிரச்னைக்குப் பிறகும் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தார்கள். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மீண்டும் சிறுமியை கண்டித்துள்ளார்கள்.

இதனிடையே இவர்கள் இருந்தால் நம்மை காதலிக்க விடமாட்டார்கள் முடிவு செய்த சிறுமி, குலைநடுங்க வைக்கும் திட்டம் ஒன்றை திட்டினார். அதன்படி காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அப்பா, அம்மா, அண்ணன்கள், 2 சகோதரிகள், பக்கத்துவீட்டுப் பெண் ஆகியோரை விஷம் வைத்து கொல்ல முடிவு செய்தார்.  இதற்காக ரகசியமாக விஷத்தை வாங்கி வைத்துக்கொண்டார். இதற்கிடையே சம்பவத்தன்று தான் சமைத்த சாப்பாட்டில் விஷத்தை கலந்த சிறுமி, அதை அனைவருக்கும் பரிமாறினார்.

விஷ சாப்பாட்டினை சாப்பிட அனைவரும் ஒவ்வொருவராக மயங்கி விழ, காதலனுடன் அந்த சிறுமி ஓட்டம் பிடித்தார். இதையடுத்து தற்செயலாக அங்கு வந்த ஒருவர், இவர்கள் மயங்கிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அப்போதுதான் அவர்கள் விஷம் கலந்த உணவை சாப்பிட்டிருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், அந்தச் சிறுமியையும் காதலனையும் தீவிரமாக தேடி வருகிறார்கள். காதலுக்காக, குடும்பத்தினருக்குச் சாப்பாட்டில் விஷம் வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags : #MURDER #UTTARPRADESH #MINOR GIRL #ELOPES #BOYFRIEND #POISONING FAMILY #UP