‘ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க.. இந்த பரிசெல்லாம் உங்கள கொல்லதான்.. ரெடியா இருங்க மோடிஜி’.. சிக்கிய பாடகி! வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 15, 2019 09:50 PM

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, பாம்பு, முதலைகளை வைத்துக் கொல்வேன் என்று கூறிக்கொண்டு பாகிஸ்தான் பாடகி ஒருவர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையைக் கிளப்பியது.

Pak Singer threatened Modi using Snakes and crocodile

பாகிஸ்தானைச் சேர்ந்த ரபி பிர்ஸாடா என்கிற இந்த பாடகி, தனது கைகளில் நிறைய விஷ பாம்புகளையும், தரையில் சில மலைப் பாம்புகளையும், முதலையையும் வைத்திருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் அதிரச் செய்யும் கேப்ஷனோடு ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதன்படி, தன்னிடம் இருக்கும் அந்த பாம்புகள் மற்றும் முதலைகளோடு விளையாண்டுக் கொண்டிருக்கும் ரபி பிர்ஸாடா, காஷ்மீர் மக்களை மோடி துன்புறுத்துவதாகவும், தன்னிடம் இருக்கும் அந்த பாம்புகள், முதலைகள் எல்லாம் மோடியைக் கொல்வதற்காக, தான் வைத்திருக்கும் பரிசு என்றும் அதனால் மோடியை இறப்பதற்கு தயாராய் இருக்குமாறும் அவர் கூறுகிறார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பிரதமருக்கு கொலை மிரட்டல், பாம்பு-முதலைகளை வீட்டில் வளர்த்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக லாகூரில் இருந்த அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : #SNAKE #PAKISTAN #RABI PIRZADA