'தகாத உறவினால் விழுந்த தர்ம அடி'..'அவர யாருன்னு நெனைச்சீங்க'.. 'பரபரப்பை கிளப்பிய பெண்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 17, 2019 05:34 PM

நெல்லையில் உள்ள ஏர்வாடியில் இளம் பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்துக்கொண்டதாகக் கூறி, நபர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Man assaulted by people of village, due to illegal relation

ஏர்வாடி எல்.என்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மணி என்பவர், அதே ஊரில் வசிக்கும் ரோஷன் பானுவின் வீட்டுக்கு சென்றபோது அப்பகுதியில் இருந்த இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து, ரோஷன் பானுவுடன் தகாத உறவு வைத்துக்கொண்டதால், மணியை கையும் களவுமாக பிடித்ததாகக் கூறி, அவரை அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், மக்களால் தாக்கப்பட்ட நபர் வேறு யாருமல்ல தனது கணவர்தான் என்றும், அவரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏர்வாடி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அவர்களின் மீதான வழக்கை வாபஸ் செய்ய வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் போலீஸ் ஸ்டேஷனை சூழ்ந்துகொண்டனர். உண்மையில் ரோஷன் பானுவின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், மணி அவரது கணவரல்ல, அவருடன் தகாத உறவு வைத்திருப்பவர் என்றும் பொதுமக்கல் தரப்பில் கூறப்படும் தகவல் பற்றியும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #NELLAI #WOMAN #BIZARRE