‘அது நடந்து 3 வருஷம் ஆச்சு’.. ‘இதுவரைக்கும் யாரும் என்கிட்ட பேசல’ அதனால...! அதிர வைத்த மாணவியின் தற்கொலை கடிதம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 17, 2019 12:38 PM

பள்ளியில் சக மாணவிகளின் புறக்கணிப்பால் 11 -ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11th std School girl commits suicide in school in UP

உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 11 -ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டிள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தவுடன், உடனே அவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விடுதியில் நடத்திய சோதனையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்துள்ளது. அதில், ‘அந்த சம்பவம் நடந்து 3 வருடங்கள் கடந்து விட்டது. அதற்காக இன்னும் நான் தண்டிக்கப்படுகிறேன். என்னை விரும்பியவர்கள்கூட என்னிடமிருந்து விலகிவிட்டனர். என் சக தோழிகள் நம்பாவிட்டால் எப்படி நான் 12 -ம் வகுப்பு வரை அவர்களுடன் படிக்க முடியும்’ என இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதம் குறித்து மாணவி ஒருவரிடம் விசாரிக்கையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அப்பள்ளி மாணவியின் உணவை இவர் சாப்பிட்டுவிட்டாறாம், அதற்கு சீனியர் மாணிவிகள் இப்பெண்ணை தாக்கியுள்ளனர். அதாவது 48 மாணவிகள் அடித்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருந்து அம்மாணவியிடம் யாரும் பேசவில்லை என கூறப்படுகிறது. வகுப்பில் சக மாணவிகளின் புறக்கணிப்பால் 11 -ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UTTARPRADESH #SUICIDE #STUDENT #GIRL #NAMKEEN #HUMILIATION