'இனிமே 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும்'... 'தமிழக அரசு அடுத்த அதிரடி'... வெளியான ‘புதிய’ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 13, 2019 09:30 PM

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதலே 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், பொத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

5th and 8th standard also will be held public exam

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், மாநில பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்கி வரும் மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் நடப்பு கல்வியாண்டு (2019 -20) முதல் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு, அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. எனினும்,தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டாம்  என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டே பொதுத் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தொடக்க கல்வி இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டுமே, பல ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த வகுப்புகளுடன், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கும், தற்போது பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், இனி பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கிலம் மொழித்தாள்கள் தமிழ் 1, 2 மற்றும் ஆங்கிலம் 1,2 என்ற வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதல், இரு தாள்களாக தேர்வு எழுதும் முறை ரத்து செய்யப்பட்டு, தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்துக்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : #STATEBOARDEXAM #PUBLICEXAM #STUDENT