‘நெருங்கிய நண்பனோட தற்கொலை என்னை உடைய வச்சிருச்சு’.. பிரபல வீரர் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 13, 2019 05:16 PM
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி 226 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இப்போட்டியில் சிறப்பாக ஆடியது குறித்து பேசிய மிட்சல் மார்ஷ், ‘பெரும்பாலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் என்னை வெறுக்கின்றனர். அவர்களுக்கு கிரிக்கெட் மீது அளவுகடந்த பற்று உண்டு. அதனால் ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாட வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். எனக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அதை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இனி என்னை அவர்கள் மதிப்பார்கள் என நம்புகிறேன். நிச்சயம் ஒரு நாள் அவர்களது அன்பை வெல்வேன்’ என பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ‘மீண்டும் அணியில் வாய்ப்பை பெற கடந்த 5 மாதங்களாக கடுமையாக உழைத்தேன். கடந்த ஆண்டுபோல் இனி அமையக்கூடாது என நினைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. என் நெருங்கிய நண்பன் தற்கொலை செய்துகொண்டதில் நொருங்கி போனேன். இதுபோன்ற விஷயங்கள் என்னை லேசாக தடம்புரளச் செய்தன. ஆனால் அதிலிருந்து மீண்டு இதுபோல் ஆடமுடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
