‘மதுபோதையில் மருமகன் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 13, 2019 03:52 PM

மதுரையில் மாமனாரை நடுரோட்டில் குத்திக் கொலை செய்த மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Madurai Man brutally murdered his father in law

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அலங்கம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கையா. இவரது மகள் தனலட்சுமிக்கும், அதே பகுதியைச்  சேர்ந்த நல்லமணி என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழும் இவர்கள் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக இன்று காலை மேலூர் வந்த தங்கையா பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த அவருடைய மருமகன் நல்லமணி அவரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தங்கையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் நல்லமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MADURAI #MELUR #BUSSTAND #BRUTAL #MURDER #FATHERINLAW #SONINLAW