'யே..கொழந்தைங்க இருக்குற ஸ்ட்ரீட்ல'.. 'இப்டியா போவீங்க'.. 'தட்டிக்கேட்ட நண்பர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 16, 2019 11:15 AM
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி இந்திராகுமாரி டெல்லியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மெரைன் என்ஜினியராக பணிபுரியும் முருகேசன், நீண்ட நாட்கள் கழித்து தூத்துக்குடிக்கு வந்ததுடன், தனது நண்பர் விவேக்குடன் தனது தெருவில் நின்றபடி பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்தத் தெருவில் வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பரை நிறுத்திய முருகேசன், ‘சின்னப் பிள்ளைகள் இருக்கும் தெரு, இவ்வளவு வேகமா வண்டி ஓட்டிகிட்டு வர்றீங்க?.. பொறுமையா போங்க?’ என்று கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அங்கு வாக்குவாதம் எழுந்தது. அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் இவர்களின் சண்டையைத் தடுத்து அவரவரை அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ஆனால் அதன் பின்னர் 7 பேருடன் வந்த மணிகண்டன், முருகேசனையும் அவரது நண்பரான விவேக்கையும் தேடி சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டுச் சென்றுவிட்டனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.