'கஞ்சா அடிச்சுட்டு ரொம்ப தகராறு பண்ணான்'... பெற்ற மகன் என்றும் பாராமல்... 'தாய்' செய்த வெறிச்செயல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இளைய மகனுடன் சேர்ந்து தன்னுடைய மூத்த மகனை துண்டு துண்டாக வெட்டி தாய் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், தொட்டமாந்துறை ஆற்றுப்பகுதியில் நேற்றிரவு தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் தெரியாத வகையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொலை செய்தவரின் வாகன எண்ணை வைத்து கொலையாளிகளை பிடித்தனர். விசாரணையில் கம்பம் மருவரசி மஹால் பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் தன்னுடைய இளைய மகனுடன் சேர்ந்து, மூத்த மகனை வீட்டில் வைத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், "மூத்த மகன் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தான். ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோம்" எனக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, கொலை செய்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட தலை, கை, கால்களை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
