'வடபழனியில்' பரபரப்பு... பைக்கில் சென்ற இளம்பெண்ணுக்கு 'பாலியல்' தொல்லை... நீங்களே இப்படி செய்யலாமா? அடித்து உதைத்த பொதுமக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 06, 2020 03:40 PM

சென்னை வடபழனி அருகே பைக்கில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பொதுமக்கள் அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Commando Soldier arrested by police in Chennai Vadapalani

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நண்பருடன் பைக்கில் சென்றிருக்கிறார். அசோக் பில்லர் அருகே செல்லும்போது அருகில் பைக்கில் வந்த மற்றொரு நபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய நண்பருடன் பைக்கில் சென்ற அந்த நபரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். எம்.எம்.டி.ஏ அருகே சென்றபோது அந்த நபரின் பைக் மீது மோதி அவரை கீழே தள்ளி பொதுமக்கள் உதவியுடன் அவரை அடித்து உதைத்துள்ளனர்.

தகவலறிந்த வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். தொடர்ந்து இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரைக்கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் கமாண்டோ வீரராக பணியாற்றி வருவதாகவும், தன்னுடைய பெயர் முரளி கிருஷ்ணன் என்றும் அந்த நபர் தெரிவித்து இருக்கிறார். குடிபோதையில் இருந்ததால் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் விளக்கமளித்து உள்ளார். இதையடுத்து கமாண்டோ பிரிவின் உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags : #POLICE