'சீனாவில் இருந்து... 'தன்னந்தனியாக'... சென்னை வந்த மாணவி'!!... 'நிறைவேறாமல் போன ஆசை!... திகைப்பூட்டும் உண்மை சம்பவம்'!...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 31, 2020 10:59 AM

சீனாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மருத்துவ மாணவி ஒருவர் மட்டுமே பயணித்தது தற்போது தெரிய வந்துள்ளது.

chennai student arrives chennai lonely from china shares pic

சென்னையைச் சேர்ந்த மாணவி, எம். வேலம். இவர் சீனாவில் மருத்துவம் படித்து வருகிறார். கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக பல்வேறு விமான நிறுவனங்கள் சீனாவுடனான போக்குவரத்தை துண்டித்துள்ள நிலையில், சீனாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள டியாஞ்சின் (TIANJIN) நகரில் இருந்து விமானம் மூலம் நேற்று அவர் சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில், டியாஞ்சினில் இருந்து சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் இவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார். இதனால், சீனாவில் இருந்து வந்த கடைசி நபர் இவராகத்தான் இருக்கமுடியும் எனச் சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, விமானத்தில் தான் மட்டுமே இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டிருக்கிறார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவில் இருந்து மருத்துவ சேவையாற்ற எம். வேலம் விரும்பியதாகவும், தங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அவர் தாயகம் திரும்பியதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும், விமான நிலையத்தில் முறையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அவர் வெளியேற அனுமதிக்கப்பட்டதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

Tags : #COLLEGESTUDENT #CORONAVIRUS #CHINA #MEDICO