'இளம் மருத்துவருக்கே இந்த நிலைமையா'... 'எதிர்பாராமல் நேர்ந்த துயரம்'... கலங்கி நிற்கும் உறவுகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்டெங்குகாய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்பில் இளம் மருத்துவர் பலியாகியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Batticaloa : Mattakalappu young Doctor died due to dengue fever Batticaloa : Mattakalappu young Doctor died due to dengue fever](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/batticaloa-mattakalappu-young-doctor-died-due-to-dengue-fever.jpg)
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் கௌதமன் தரண்ணியா. இந்த பகுதியில் தற்போது டெங்குகாய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. இதனால் அந்த பகுதியில் மருத்துவ பணிகளில் மருத்துவர் தரண்ணியா ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் அவருக்கும் திடீரென டெங்கு தொற்றிக்கொண்டது. இதனால் மருத்துவச் சிகிச்சையிலிருந்த அவர் திடீரென உயிரிழந்தார். இளம் மருத்துவரான கௌதமன் தரண்ணியாவின் மரணம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது, அவர் பகுதியில் வசிக்கும் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவ பணியில் சிறப்பாக ஈடுபட்டு வந்த அவருக்கே இந்த நிலைமையா என, கிழக்கு மாகாண மக்கள் பலரும் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள். டெங்குவினால் இன்னும் எவ்வளவு மரணங்கள் நிகழப் போகிறதோ எனப் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளார்கள். எனவே கிழக்கு மாகாண பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகள் பலரும் அறிவுறுத்தியுள்ளார்கள்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)