கல்யாணத்துக்கு முன்தினம் மணப்பெண் எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 05, 2020 10:19 AM

திருமணத்துக்கு முன்பு மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman found dead on night before wedding in Uttar Pradesh

உத்தர பிரதேசம் மாநிலம் பிஞ்னோர் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணமால் போயுள்ளார். இதனால் பெண்ணின் உறவினர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் இளம்பெண்ணை தீவிரமாக தேடியுள்ளனர். இந்த நிலையில் மாலன் ஆற்றில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்றுள்ளனர். அங்கு ஆற்றுப் பாலத்தின் ஒரு தூணின் ஓரமாக இளம்பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. உடனே அப்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் இவர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இப்பெண்ணுக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது. இவருடைய தாய் ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துள்ளார். தந்தையும் சமீபத்தில் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அப்பெண் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனவருத்தில் அப்பெண் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.