"உலகப்போரில் அழிந்த மொத்த பூங்கா'!.. 'உயிர்தப்பிய ஒத்த முதலை'!.. "ஹிட்லரின் செல்லப்பிள்ளைக்கு நடந்த சோகம்!"
முகப்பு > செய்திகள் > உலகம்1945ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப் போரில், ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படைகள் ரஷ்யாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகளைத் தோற்கடித்தன. இந்தப் போரின்போது ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ஹிட்லர் தனது மனைவியுடன் தங்கியிருந்தபோது, பெர்லின் சுற்றி வழங்கப்பட்டதாக உணர்ந்த ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி செம்படை தன்னை நெருங்குவதற்கு முன் தன் கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் சர்வாதிகார நடவடிக்கைக்கு அதிபதியான ஹிட்லர் பெர்லினில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவுக்கு சென்று அங்குள்ள விலங்குகள் மற்றும் உயிரினங்களை வழக்கமாக பார்த்து வந்துள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது. இந்நிலையில் 1936 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த முதலை ஒன்று, அந்த பூங்காவுக்கு பரிசாக வழங்கப்பட, அந்த முதலையை ஹிட்லர் அடிக்கடி பார்வையிட்டு வந்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஹிட்லருக்கு விருப்பமான உயிரினமாகவும் அந்த முதலை மாறிவிட்டது. சடோன் என்று பெயர் சூட்டப்பட்டிருந்த அந்த முதலைதான் “ஹிட்லரின் முதலை” என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டது.
இதனிடையே 1943 ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருக்கும்போது, பெர்லின் நகரில் செம்படைகள் வான்வழி தாக்குதல் நிகழ்த்தின. இந்த தாக்குதலில் ஹிட்லர் அடிக்கடி சென்று சுற்றிப்பார்த்து வந்த அந்த உயிரியல் பூங்கா பெரும் அழிவுக்குள்ளானது. இதனால் அந்த பூங்காவில் இருந்த பல்வேறு உயிரினங்கள் மரணித்தன. இதனால் அந்த பூங்கவில் வளர்க்கப்பட்ட 24 க்கும் அதிகமான முதலைகளும் உயிரிழந்தன. எனினும் இந்த தாக்குதலில் ஹிட்லர் அடிக்கடி பார்வையிட்ட சடோன், அப்போது உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்டது. ஆனால் நாசிப் படைகள் சரணடைந்த பின்னர் 1946ஆம் ஆண்டு ஜெர்மனி பாதுகாப்பு படையில் இங்கிலாந்து வீரர்கள் சிலர் இந்த முதலையைக் கண்டுபிடித்தனர்.
ஆனால் இடையில் 1943 ஆம் ஆண்டு முதல் 46 ஆம் ஆண்டுவரையிலான அந்த 3 ஆண்டுகள் சடோன் முதலை எங்கிருந்தது என்கிற தகவல்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. இதேபோல் வான்வழித் தாக்குதலில் இருந்து அதை முதலை எவ்வாறு தப்பியது என்றும் யாருக்கும் தெரியவில்லை. இதனையடுத்து அந்த முதலை ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தது. இதனாலேயே அந்தப் பூங்காவுக்கு கூட்டம் கூட்டமாக போன மக்கள் பலரும், “ஹிட்லரின் செல்லப்பிராணி.. ஹிட்லரால் வளர்க்கப்பட்ட முதலை” என்று ஆச்சரியமாக இந்த முதலையை பார்த்து வந்தனர். இந்த தகவல்களை உறுதிப்படுத்த தற்போது வரை எந்த ஆதாரங்களும் கிடைக்காத நிலையில் 84 வயது நிரம்பிய சடோன் முதலை நேற்றுமுன்தினம் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துவிட்டதாக உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.