‘மோதலில்’ முடிந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு பின்... வீரர்கள் செய்த காரியத்தால் ‘குவியும்’ பாராட்டுகள்!... ‘வைரல்’ வீடியோ...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Feb 10, 2020 09:00 PM

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற வங்கதேச அணி மைதானத்திலிருந்த குப்பைகளை அகற்றியதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

U19 World Cup After Celebrations Bangladesh Team Cleans Up Litter

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் வங்கதேசம் முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. பின்னர் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது அந்நாட்டு வீரர்கள் இந்திய வீரர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே சண்டை பெரிதாவதற்குள் அதிகாரிகள் வந்து வீரர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், கொண்டாட்டத்திற்கு பின் வங்கதேச வீரர்கள் மைதானத்தில் சிதறிக் கிடந்த குப்பைகளை சுத்தம் செய்ய உதவும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஐசிசியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி, வங்கதேச வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

 

Tags : #CRICKET #ICCWORLDCUP #INDVSBAN #VIDEO #VIRAL