VIDEO: ‘ஒருமுறை கை தட்டுனா 2 சொட்டு ரத்தம் ஊறும்’.. ‘உண்மையதான் சொல்றோம்’.. அமைச்சர் செல்லூர் ராஜூ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒருமுறை கை தட்டினால் இரண்டு சொட்டு ரத்தம் ஊறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல் நத்தம் பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கியின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ வங்கியை திறந்து வைத்தபின் விழாவில் பேசிய அவர், ‘ஒருமுறை கை தட்டினால் 2 சொட்டு ரத்தம் ஊறும்’ என பேசி அங்குள்ளவர்களிடம் கைதட்டலை வாங்கினார்.
மேலும் பேசிய அவர், காலையில் கை தட்டினால் சுறுசுறுப்பாக இருக்கும், அன்றைக்கு முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம். ரத்த ஓட்டம் கூடும். உண்மையதான் சொல்றோம். தவறையே சொல்ல மாட்டோம்’ என அவர் பேசினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
News Credits: Puthiya Thalaimurai
Tags : #AIADMK #SELLURRAJU #VIRAL
