'பிரியாணி சாப்பிட ஆசப்பட்டது ஒரு குத்தமா?!'... 'அநியாயமா 50,000 ரூபாய ஆட்டைய போட்டுடாங்களே!'... ஐ.டி. ஊழியருக்கே இந்த நிலையா?... பக்கா ஆன்லைன் ஃப்ராட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 14, 2020 11:15 AM

ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்த ஐ.டி. ஊழியரிடம் 50,000 ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

it employee loses 50k rs through online customer care number

ஹைதராபாத் அருகே உள்ள ரஹ்மத் நகர் பகுதியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஒருவர், சில தினங்களுக்கு முன், Zomato ஆப்பின் மூலம், சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணத்தால், சிக்கன் பிரியாணிக்கு பதிலாக சாம்பார் சாதம் ஆர்டர் ஆகியுள்ளது. இதனால், விரக்தி அடைந்த அவர், Zomato வின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள ஆன்லைனில் தேடியுள்ளார். Zomato ஆப்புக்கு வாடிக்கையாளர் சேவை எண் என்ற ஒன்று இல்லாத நிலையில், Zomato வின் வாடிக்கையாளர் சேவை எண் என்று குறிப்பிடப்பட்ட போலி எண் ஆன்லைனில் அவர் கவனத்திற்கு வந்துள்ளது.

அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தன்னுடைய வருத்தத்தை அவர் பதிவு செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, ஐ.டி. ஊழியரின் செல்போனுக்கு QR Code ஒன்றை, அவரிடம் பேசிய நபர் அனுப்பியுள்ளார். அதை ஸ்கேன் செவதன் மூலம், சிக்கன் பிரியாணிக்கு செலுத்திய பணத்தை அந்த ஐ.டி. ஊழியர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், QR Code-ஐ அவர் ஸ்கேன் செய்யவே, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் எடுக்கப்பட்டுவிட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த ஐ.டி. ஊழியர் போலீஸில் புகாரளித்துள்ளார்.

இது குறித்து காவல் துறை தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாவது, QR Code-ஐ வைத்து வங்கிப் பணம் திருடும் முறை தற்போது அதிகமாகி வருகிறது. எனவே, ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யும் இணைய வாசிகள், எந்த நிலையிலும் தங்களுடைய வங்கி விவரங்களை மூன்றாவது நபருக்குத் தெரியபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், Zomato வுக்கு வாடிக்கையாளர் சேவை மைய தொடர்பு எண் இல்லாததால், அதன் பயனாளிகள் யாரும் அது குறித்து தேட வேண்டாம் என Zomato நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #BRIYANI #ZOMATO #ONLINE #FRAUD