‘13 பேர் பலி!’.. 31 பேர் படுகாயம்.. கண்டெய்னர் லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதி.. நொடியில் நடந்த கோர விபத்து!
முகப்பு > செய்திகள் > இந்தியாலாரி மீது பஸ் மோதிய விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஃபிரோசாபாத் என்கிற பகுதியில், இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி மீது, டெல்லியில் இருந்து பீகார் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, மோதியதால் நடந்த கோர விபத்தில் பயணிகள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 31 பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விபத்து சம்பவத்தில் காயமுற்றபவர்களுக்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரப் பிரதேச மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Tags : #ACCIDENT #BUS #UTTARPRADESH
