VIDEO: பீட்சா டெலிவரி பாய் செய்ற வேலையா இது?.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா.. பகீர் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Feb 12, 2020 11:11 AM

வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய பீட்சாவில் உமிழ்நீரை துப்பிய டெலிவரி பாய்க்கு நீதிமன்றம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Pizza delivery man jailed for spitting on customer\'s food in Turkey

துருக்கியில் உள்ள எஸ்கிஷெகிர் என்ற இடத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். அதனை டெலிவரி செய்த புராக் என்ற டெலிவரி பாய், பீட்சாவில் உமிழ்நீரை துப்பி அதை விநியோகம் செய்துள்ளார். அப்போது அதனை தனது செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார். இந்த செயல் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், பீட்சாவை வழங்கிய புராக் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த வழக்கிற்கு நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி பீட்சாவில் உமிழ்நீர் துப்பி டெலிவரி செய்த குற்றத்திற்காக புராக்கிற்கு இரண்டரை வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஏற்கனவே புராக் 6 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் மீதமுள்ள 2 ஆண்டுகளையும் சிறையில் கழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பீட்சாவில் உமிழ்நீரை துப்பிய டெலிவரி பாய்யின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மேலும் மக்கள் சாப்பிடும் உணவில் உமிழ்நீரை துப்பிய டெலிவரி பாய்யின் செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags : #PIZZA #DELIVERYMAN #SELFIE #TURKEY #VIRAL