‘ஸ்கூல் நேரத்துல பள்ளி மாணவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த ஆசிரியை!’.. ‘சிக்கிய பின் வைத்த கோரிக்கை!’

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Feb 11, 2020 08:31 AM

பள்ளி மாணவர்களுக்கு போதை மருந்து விநியோகித்ததற்காக பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடுங்க வைத்துள்ளது.

female teacher delivers drugs to students in school hours

விக்டோரியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நேரத்திலேயே பள்ளி மாணவர்களுக்கு போதை மருந்தினை, ஆசிரியை லீ என்பவர் விநியோகித்துள்ளதை தாமதமாக போலீஸார் கண்டுபிடித்தனர். எனினும் ஆசிரியை லீ குற்றவாளியாக கண்டுபிடிக்கப்பட்டபோது அவர் ஆசிரியர் பணியில் இல்லை.

ஆனால் இந்த குற்றச் செயல் புரிந்த லீ அடுத்த 5 வருடங்களுக்கு ஆசிரியைப் பணியை செய்ய முடியாது என்றும் அதற்கான உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஆசிரியை லீ தான் செய்த தவறுக்கு வருந்துவதாகவும், தான் தொடர்ந்து ஆசிரியப் பணியை மேற்கொள்ள விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். 

எனினும் அவருக்கு உளவியல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Tags : #SCHOOLSTUDENT #TEACHER #DRUG