‘தம்பிய சந்தோஷப்படுத்தப் போறேன்’... ‘ஹார்மோனிகாவை வாயில் வைத்து’... ‘மாணவி செய்த காரியத்தால்’... ‘கடைசியில் நேர்ந்த துன்பம்’!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்தம்பியை மகிழ்விக்க எண்ணி பள்ளி மாணவி ஒருவர் ஹார்மோனிக்காவை வாயில் வைத்தபோது முழுவதும் மாட்டிக்கொண்டு தவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் ஒன்டேரியா மகாணத்தில் மேல்நிலைப்பள்ளி படிக்கும் டீன் ஏஜ் மாணவியான மோலி ஓ பிரென் (Mollie O’Brien ) என்பவர், தனது டிக்டாக் வீடியோ மூலம் தம்பியை மகிழ்விக்க நினைத்துள்ளார். இதற்காக ஹார்மோனிக்கா முழுவதையும் வாயில் வைத்து வாசித்து டிக்-டாக் வீடியோ ஒன்று எடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக ஹார்மோனிக்கா முழுமையும் அவரின் வாயில் மாட்டிக்கொண்டு ஊதினால் காற்று மட்டும் வந்துள்ளது.
இதனால் வலியால் துடித்துப்போன அந்த மாணவி, இதனையும் வீடியோ எடுத்துள்ளார். சுமார் அரை மணிநேரம் வலி தாங்காமல் அவர் துடித்துப்போனார். பின்னர் அவரது தாயார், பல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மோலியின் வாயில் உள்ள ஹார்மோனிகாவை அகற்றியுள்ளார். மேலும் இதுபோன்று இனிமேல் செய்யக்கூடாது என்று மருத்துவர் அறிவுரை கொடுத்துள்ளார். இது குறித்து மோலி தனது டிக்-டாக் பக்கத்தில் இது போன்று யாரும் பயன்படுத்தாதீர்கள்.
இதனால் தான் அவதியுற்றது போன்று யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே ஹார்மோனிகா வாயில் மாட்டிக்கொண்ட வீடியோவை வெளியிடுவதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு வலி ஏற்பட்ட போதெல்லாம் சொற்களை கூற வரும் போதும், மூச்சு விடும் போதும் ஹார்மோனிகா இசைத்ததாகவும் அது தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
