'இப்ப வாங்கடா பாக்கலாம்'... 'பள்ளியில் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க... 4ம் வகுப்பு மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு!'
முகப்பு > செய்திகள் > இந்தியாபள்ளிக் கொடுமைகளைத் தெரிவிக்க ஒரு செயலியை கண்டுபிடித்த 4ம் வகுப்பு மாணவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி மெய்தைபாஹூன் மஜாவ். இவர், தனக்கு எதிராக பள்ளியில் நடந்த சில கொடுமைகளால் (Bullying) பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், அதைப் பற்றியே சிந்தித்து வந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, இம்மாதிரியான அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு தீர்வை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மெய்தைபாஹூன் மஜாவ் ஈடுபட்டுள்ளார். அதன் விளைவாக, ஒரு செயலியை அவரே உருவாக்கியுள்ளர். இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவெனில், புகாரை எந்த நபர் தெரிவிக்கிறார் என்பதை வெளிப்படுத்தாமல் அதிகாரிகளுக்கு புகாரளிக்கும் வகையில் அவர் தயாரித்துள்ளார்.
இது குறித்து மஜாவ் ஊடகத்திற்குக் கொடுத்த பேட்டியில், "நான் நர்சரியில் இருந்தே பள்ளியில் நடைபெறும் கொடுமைகளை அனுபவித்து வந்தேன். அது என்னைப் பாதித்தது. ஆகவே, நான் அதை வெறுக்கிறேன். இதனால், நான் எப்போதும் ஒரு தீர்வைத் தேடிக்கொண்டே இருந்தேன். வேறு எந்தக் குழந்தைக்கும் இந்தப் பாதிப்பு வரக்கூடாது" என்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் மெய்தைபாஹூன் மஜாவ் ஒரு ஆப்-டெவலப்மென்ட் படிப்பில் சேர்ந்ததாகவும், சில மாதங்களுக்குள்ளேயே அதன் திறன்களைப் பயின்று, தேறிவிட்டதாகவும் அவரது தாயார் தசுமார்லின் மஜாவ் தெரிவித்துள்ளார்.
இச்சிறிய வயதில் தனக்கு ஏற்பட்ட பிரச்னைக்கான தீர்வை அணுகி, அதில் வெற்றியும் கண்டுள்ளதால், இவரை அப்பகுதி மக்கள் வெகுபாக பாராட்டியுள்ளனர்.
