‘5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த வருஷம் கேன்சேல்!’.. ‘தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 04, 2020 02:32 PM

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு(2020) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு முன்னமே அறிவித்திருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

public exam cancelled in this year for 5th, 8th students, TN Govt

முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது என்றும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.