'செய்தித்தாள்கள்' மூலம் 'கொரோனா' பரவுமா?... 'மருத்துவர்கள்' கூறுவது 'என்ன?...' 'உலக' சுகாதார அமைப்பு 'விளக்கம்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 25, 2020 06:41 PM

செய்தித் தாள்கள் மூலம் கொரோனா பரவுமா? என்பதுகுறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.

Does Corona spread through newspapers? : WHO Description

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும், எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்து வருகின்றனர். உலக சுகாதார அமைப்பும் பொதுமக்கள் எவ்வாறு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை விளக்கங்களை கூறி வருகிறது.

இதனிடையே செய்தித்தாள், ரூபாய் நோட்டுகள், உணவுப் பொருட்களைப் பேக்கேஜ் செய்து வரும் அட்டைகள் ஆகியவற்றின் மூலம் வைரஸ் தொற்று ஏற்படுமா? என்ற சந்தேகம் பலருக்கும்  நிலவுகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, பல்வேறு சூழ்நிலைகள், தட்ப வெப்ப நிலைகளில் எடுத்து வரப்படும் பொருள்கள் மூலம் கொரோனா பரவ குறைவான சாத்தியமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அதேநேரத்தில் இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவரான கே.கே. அகர்வால், செய்திதாள்களும், மற்ற பொருள்கள் போன்றதுதான் என்றும், ஆதலால் செய்திதாள்களை வாசிக்கும் முன்பும், வாசித்த பிறகும் கைகளை சுத்தம் செய்வது அவசியம் என்றும்  தெரிவித்துள்ளார்.

வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வைராலஜி பேராசிரியர் டி.ஜேக்கப்ஜான் .‘தி பிரிண்ட்’ என்ற இணைய இதழுக்கு அளித்த நேர்காணலில், செய்தித் தாள்கள் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு எனத் தெரிவித்துள்ளார்.

செய்தித்தாளை விநியோகிக்கும் நபருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தாலோ, அவர் விநியோகம் செய்யும் செய்தித்தாளின் மீது தும்மவோ அல்லது இருமவோ செய்திருந்தாலோ மட்டும்தான் வைரஸ் பரவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதற்கான சாத்தியம் மிகக் குறைவு எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #NEWSPAPER #WHO #DESCRIPTION