'வெளிநாட்டுல' இருந்து 'காப்பாத்துங்கன்னு' சொன்னவங்க எல்லாம்... இப்போ 'ஊட்டிக்கு டூர்' வந்த மாதிரி 'சுத்துறாங்க'... 'பொறுத்து பொறுத்துப்' பார்த்த 'போலீஸ்' செய்த 'காரியம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 25, 2020 03:41 PM

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்திய 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Case filed against 3 persons for neglecting curfew

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் சீனாவிலிருந்து சென்னை திரும்பினார். அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் சுற்றித்திரிந்ததையடுத்து, திருமங்கலம் போலீசார் அவரை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல் ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து சென்னை திரும்பிய தந்தை மகன் ஆகிய இருவர் கோயம்பேட்டில் உள்ள தங்களது வீட்டுக்கு சென்றுள்ளனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்கள் அங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் அவர்கள் மீது கோயம்பேடு காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

3 பேர் மீதும் தொற்றுநோய் பரப்பும் வகையில் செயல்படுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவை அலட்சியம் செய்தல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய்களை பரப்பும் செயலில் ஈடுபடுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே முதன்முறையாக நேற்றைய தினம் கோடம்பாக்கத்தை சேர்ந்த கட்டுமான பொறியாளர் ஒருவர் துபாய் நாட்டில் இருந்து திரும்பி தனிமைப் படுத்திக் கொள்ளாமல் சுற்றித் இருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONA #CHENNAI #CURFEW #NEGLECTING #ARREST #3 PERSON