'கொரோனா' குறித்து 'தவறான' தகவல்களும், 'புரளிகளும்'... 'அறியாமையும்', அறிந்து கொள்ள வேண்டியதும்... 'முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 24, 2020 08:34 PM

உலகையே மிரட்டி வரும் கொரோனாவுடன், அதுசார்ந்த வதந்திகளும், வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கற்பனையாக பல தகவல்களையும் பரப்பி வருகின்றனர். மருத்துவர்கள் கூறும் தகவல்களே திரித்தும், மாற்றியும் கூறப்படுகிறது. உண்மையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டு பாதுகாப்பாக இருப்பது ஒன்றே தற்போதைக்கு இதற்கான ஒரே தீர்வாக இருக்கும் நிலையில், புரளிகளை கட்டுப்படுத்த வேண்டிய கடமையும் தற்போதைய சூழலில் முக்கிய அம்சமாக உள்ளது.

Misinformation and rumors about Corona-Doctors advise

இந்த வைரஸ் குறித்து பல அறியாத தகவல்களை விரிவாகக் காணலாம். கொரோனா வைரஸ் 1950ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தற்போது பரவியிருக்கும் கோவிட்-19 என்பது 7வது வகையைச் சேர்ந்தது. முந்தைய வைரஸ்கள் இதற்கு முன்னர் மனிதர்களைத் தாக்கியுள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் மனிதர்களுக்கு வரும் மூன்றில் ஒருபங்கு சளி காய்ச்சலுக்கு கொரோன வைரசே காரணம். முந்தைய கொரோனா வைரஸ்கள் விலங்குகளைத் தாக்கியிருக்கிறது.

குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொரோனா குறைந்த அளவே பாதிக்கிறது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் கொரேனாவால் பாதிக்கப்படும் போது 99.1 சதவீதம் பேர் பிழைத்துக் கொள்வார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே ஐசியு தேவைப்படும்.

இதேபோல் கொரோனா குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன. அவற்றில் முக்கியமானது வெயிலில் கொரோனா பரவாது என்பது. அது தவறு. வெயிலில் கண்டிப்பாக கொரோனா பரவும். வெயில் நேரத்தின் போது காற்றில் ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் என்பதால் பரவும் வேகம் வேண்டுமானால் குறைவாக இருக்கும். குளிர் காலத்தில் வேகமாகப் பரவும்.

இறைச்சியை உண்பதால் கொரோனா பரவும் என்பது தவறான செய்தி. நன்கு சுத்தமான தண்ணீரில் சமைத்து சாப்பிட்டால் எந்த வைரசும் உயிருடன் இருக்காது என்பதே உண்மை.

இதேபோல் நிறைய தண்ணீர் குடித்தால் கொரோனா தொற்றாது என்ற புரளியும் உள்ளது. தண்ணீர் குடிப்பதற்கும் கொரோனா தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெரும்பாலானோர் கிராமங்களில் கொரோனா தாக்குதல் இருக்காது என நம்புகின்றனர். இது தவறான நம்பிக்கை கிராமங்களிலும் வேகமாக பரவக்கூடியது கொரோனா.

இந்த வைரசை சீனா ஆய்வகங்களில் உருவாக்கியது என பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த வைரஸ் அறிவியல் கூடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது இல்லை என கண்டறிந்துள்ளனர். ஜெனோம் சீக்வன்ஸ் கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்கு தொற்றியது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டுபிடித்து விட்டனர்.

மேலும் இஞ்சி, பூண்டு, மிளகு சாப்பிட்டால் கொரோனா வராது என்பது மூட நம்பிக்கை. கொரோனா இதற்கெல்லாம் கட்டுப்படாது. 

Tags : #CORONA #MISINFORMATION #RUMORS