"அடங்கவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு தான்..." "வேற வழியில்லை..." "பெட்ரோல் பங்கையும் மூடிருவோம்..." 'எச்சரிக்கை' விடுத்த 'முதலமைச்சர்' யார் 'தெரியுமா?...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 25, 2020 10:52 AM

தெலங்கானாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மதிக்கவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்படும் என முதலமைச்சர் சந்திரசேகரராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

If the curfew is not respected, then firing will be ordered

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாநில அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என மாநில முதலமைச்சர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார். ஆனால் தெலங்கானாவில்  இளைஞர்கள் பலர், இரவு பகல் என பைக் மற்றும் காரில் ஊர் சுற்றி வருகின்றனர். போலீசார் லத்தியால் அவர்களை கடுமையாக தாக்கும் காட்சிகளும், இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இருந்தபோதும், ஊரடங்கை மதிக்காமல் பலர் சுற்றித்திரிகின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த சந்திரசேகர் ராவ் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காவிட்டால்  போலீசாருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் அதிகாரம் வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசாருக்கு கட்டுப்படவில்லை என்றால் துணை ராணுவப்படையை வரவழைக்கவும் தெலங்கானா அரசு தயங்காது என தெரிவித்துள்ளார்.

அதுபோன்ற நிலையை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என்றும், அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் சந்திரசேகர் ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மதிக்கவில்லை என்றால் பெட்ரோல் பங்க்கை மூடவேண்டியது இருக்கும் என்றும் தெலங்கானா முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

Tags : #CORONA #TELANGANA #CURFEW #CHANDRASEKARA RAO