'வேகமாக' பரவும் 'கொரோனா' தொற்று... '2 வாரங்களில்' 20 ஆயிரமாக 'அதிகரிக்கக்' கூடும்... 'இலங்கைக்கு' மருத்தவ 'நிபுணர்கள்' எச்சரிக்கை...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 24, 2020 12:45 PM

இலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Corona infection increase 20 thousand in 2 weeks in Sri Lanka

உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்து 842 ஆக உயர்ந்துள்ளது.  மொத்தம் 16 ஆயிரத்து 510 உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக  இத்தாலியில்  6 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் 20 ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக யாழ்ப்பாணம் வடக்கு மாகாண சுகாதார மையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆபத்து என்றும் எச்சரித்துள்ளனர்.

இதுவரை இலங்கையில் 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று பரவும் விதம் தொடர்பான வரைபடமும் உலகின் மற்ற நாடுகளில் பரவும் விதம் தொடர்பான வரைபடமும் ஒத்துப் போகின்றது.

இது அப்படியே தொடருமானால் இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கையில் 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். .

Tags : #CORONA #SRILANKA #2 WEEKS #INCREASE #20 THOUSAND