'காய்கறி' விலையை 'இருமடங்கு' உயர்த்திய 'வியாபாரிகள்'... '15 ரூபாய்' கத்திரிகாய், 40 ரூபாய்க்கு 'விற்பனை'... 'கோயம்பேடு' மார்க்கெட்டில் குவிந்த 'மக்கள் வெள்ளம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் காய்கறிகளின் விலையை இருமடங்கு உயர்த்தி விற்பனை செய்தனர்..

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் அந்தியாவசிய பொருட்களை வாங்குவதில் மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி- பழங்கள் வாங்க மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
அங்குள்ள காய்கறி கடைகள், பழமார்க்கெட் பகுதிகளில் வழக்கத்தை விட இரு மடங்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் காய்கறிகளின் விலையை இருமடங்கு உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை காய்கறி விலை 30 ரூபாய்க்குள் தான் இருந்தது. ஆனால் இப்போது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் காய்கறிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என நினைத்து நிறைய பேர் மொத்தமாக காய்கறிகளை வாங்கிச் செல்வதால் வியாபாரிகள் விலையை இரு மடங்கு உயர்த்தி விட்டனர்.
கோயம்பேடு மார்க் கெட்டில் ஒரு கிலோவுக்கு இன்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை விப ரம்
கத்திரிக்காய்- 40
தக்காளி- 40
வெண்டைக்காய்- 30
அவரைக்காய்- 60
பாகற்காய்- 50
புடலங்காய்- 20
பீன்ஸ்- 60
முள்ளங்கி- 40
உருளை- 30
சேனை- 30
கோஸ்- 30
சவ்சவ்- 40
காராமணி- 40
வாழைப்பூ- 50
பச்சைபட்டாணி- 60
வெளிமாநிலம், வெளி மாவட்டங்களுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இனி வரும் நாட்களில் காய்கறி கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் கூடுதலாகவே காய்கறிகளை வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோயம்பேடு மட்டுமின்றி பெரம்பூர், அம்பத்தூர், அயனாவரம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தி.நகர், திருவான்மியூர், வேளச்சேரி, மயிலாப்பூர், மாதவரம், செங்குன்றம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், உள்பட சென்னையின் பல இடங்களில் காய்கறி விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து விட்டது.
