'ஒரே வாரத்துல' வேலைய 'மாத்திட்டாங்களே'... 'ஐயோ...!' 'டான்ஸ்' வேற ஆட சொல்வாங்க போல... 'ஸ்பெயினில்' மக்களை 'பாட்டு பாடி' மகிழ்விக்கும் 'போலீசார்'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் ரோந்து சுற்றி வரும் போலீசார் பாட்டு பாடி மகிழ்விக்கின்றனர்.
கொரோனா பாதிப்பால் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் அதிக உயிரிழப்புகள் தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது.
ஸ்பெயினில் இந்நோய் கடுமையாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 33 ஆயிரத்து 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,206 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு பொதுமக்கள் நடமாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் வெளியே சுற்றுகிறார்களா? என்பதைக் கண்காணிக்க போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் ரோந்து சுற்றி வரும் போலீசார் பாட்டு பாடி பொதுமக்களை மகிழ்வித்து வருகின்றனர்.
ஸ்பெயினில் உள்ள அல்கோடியா என்ற நகரில் ரோந்து சுற்றி வரும் போலீசார் கைகளில் இசைக்ருவியுடன் பாடல்களை பாடியபடி வலம் வந்தனர். போலீசாருடன் இணைந்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் இருந்த படி பாட்டுபாடி கைதட்டி ஆரவாரம் செய்தனர்.