கொரோனாவின் மையப்பகுதியாக மாறும் அபாயம்!... 'அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த உலக சுகாதார அமைப்பு!'... 45,000 பேருக்கு தொற்று!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா பாதிப்பினால் நேற்று ஒரே நாளில் 143 பேர் பலியாகியுள்ளனர். இதனால், அங்கு உயிரிழந்தர்வர்களின் எண்ணிக்கை 700ஐ நெருங்குகிறது.

உலகின் 197 நாடுகளில் பரவியுள்ள வைரசால் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 130 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு, திங்கட்கிழமை முடிவில் 45,000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 696 ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பேசிய WHO-இன் அதிகாரி ஹாரிஸ், 'ஐரோப்பாவை அடுத்து கொரோனா வைரஸின் மையப்பகுதியாக அமெரிக்கா மாறி வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 'கொரோனவைத் தடுக்க பல நாடுகளும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கோண்டு வருகின்றன. தனிமைப்படுத்துதல், சோஸியல் டிஸ்டன்சிங் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை மேற்கொண்டாலும், இந்த வைரஸை ஒழிக்க வேண்டுமாயின் அதற்கு ஒரே வழி தான் உள்ளது. தொடர்ச்சியான பரிசோதனைகள் மட்டுமே அதற்கு தீர்வாகும்' என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில், உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் 85 விழுக்காடு ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் இருந்து பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
