'ஹை பிரசர், சுகர், கிட்னி டிஸ்ஆர்டர், ஹார்ட் பிராப்ளம்...' "மருந்து எடுத்துக் கொள்பவர்கள் ஜாக்கிரதை..." இவர்களை 'கொரோனா' எளிதில் 'தாக்கும்'... 'ஆய்வில் அதிர்ச்சித் தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 25, 2020 11:35 AM

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கோளாறு ஆகிய பிரச்னைகளால் அவதிபடும் நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால், 'கொரோனா' பாதிப்பு, எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளதாக, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

Corona can easily attack high blood pressure, diabetes patients

சர்வதேச நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா வைரஸ், இளம் வயதினரை காட்டிலும், முதியவர்களையே அதிகமாக பாதிக்கிறது. இந்நிலையில், இதுகுறித்த அறிவியல் விளக்கத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள், ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை, 'ஜர்னல் ஆப் ட்ராவல் மெடிசன்' என்ற இதழில் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான, அமெரிக்காவின் லுாசியானா பல்கலைக்கழக பேராசிரியர் கேம்ஸ் டியாஸ், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நீண்டகால சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, ஏ.சி.இ.ஐ., மற்றும் ஏ.ஆர்.பி., ஆகிய மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இந்த நோய்களால் அவதிப்படுவோரில் பெரும்பாலானோர், முதியோர்கள் தான். அவர்கள், இந்த மருந்துகளை தினமும் எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, அவர்களின் இதயம் மற்றும் நுரையீரலுக்கு இடையிலான ரத்த ஓட்டத்தில், ஏ.சி.சி., - 2 எனப்படும், ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் - -2 ரிசெப்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ரிசெப்டர்களை, கொரோனா வைரஸ், தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, மனிதர்களை பாதிக்கிறது.

சீனாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 1,099 நோயாளிகளின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், இந்த உண்மை தெரியவந்துள்ளது. இந்த மருந்துகளை எடுத்துவரும் நோயாளிகள், அதை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் யாரும், மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : #CORONA #BLOOD PRESSURE #DIABETES #AMERICA #NEW STUDY