'தந்தையின்' 'இறுதிச்சடங்கில்' பங்கேற்க முடியாத நிலை.... 'விமானங்கள்' ரத்தானதால் 'அமெரிக்காவில்' தவித்த மகன்... 'இறுதிச்சடங்கை' வீடியோவில் பார்த்து 'கதறி அழுத'.... 'நெஞ்சை' உருக்கும் 'சோகம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்ப முடியாததால் மகனால் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், தெனு கந்தி கோர்லு கிராமத்தை சேர்ந்தவர் கோபால் ராவ். இவருக்கு வெங்கடராம் பிரசாத் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர்.
வெங்கடராம் பிரசாத் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில், கோபால் ராவ் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த தகவல் அமெரிக்காவில் உள்ள வெங்கடராம் பிரசாத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பதறிப் போன வெங்கடராம பிரசாத் விமான டிக்கெட்டுக்காக முயற்சித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவைகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரால் அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை.
இதனால் தந்தை இறுதிச்சடங்கில் வெங்கடராம பிரசாத் பங்கேற்க முடியாத பரிதாபமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து கோபால் ராவின் இறுதிச் சடங்கை அவரது மகள் லட்சுமி செய்தார்.
இந்த இறுதிச் சடங்கை வெங்கடராம பிரசாத் அமெரிக்காவில் இருந்து வீடியோவில் பார்த்து கதறி அழுதார். இது உறவினர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
