"இங்கேயே சாப்பிடுங்க.... இங்கேயே தூங்குங்க..." "இனிமே ஹாஸ்பிட்டல் தான் உங்க வீடு..." 'டாக்டர்கள்' வீட்டுக்குச் செல்ல 'தடை...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 25, 2020 12:37 PM

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், வீட்டிற்கு செல்லாமல், மருத்துவமனையிலேயே தங்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Corona treating doctors, forbidden to go home

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அவசரகால கட்டுப்பாட்டு மைய அதிகாரி, நாகராஜன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சையளிக்க கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அந்த பாதிப்பு நேரடியாக பரவ வாய்ப்புள்ளது என்பதால், அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், "சுழற்சி முறையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களை, வீட்டிற்கு அனுப்பக் கூடாது. அவர்களை, மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைக்க வேண்டும். இது கட்டாயம் அல்ல; விருப்பப்பட்டால், உரிய பாதுகாப்புடன் வீடுகளுக்கு செல்லலாம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #CORONA #TREATING #DOCTORS #FORBIDDEN #GO HOME #TAMILNADU