VIDEO: கொரோனா ஒழிப்பில்... 'உலகத்துக்கே இந்தியா தான் வழிகாட்டி!'... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை!... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரவ வெறும் நான்கு நாட்களே ஆகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா சிறந்து விளங்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜே ரியான், "கொரோனா வைரஸ் பரவலை தடுத்து சமாளிக்கும் மிகப்பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது. ஏனெனில், சின்னம்மை மற்றும் போலியோ ஆகிய இரண்டு தொற்று நோய்களை ஒழித்த அனுபவம் உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து பரிசோதிக்கும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்தியா மிகவும் மக்கள் தொகை கொண்ட நாடு, இந்த வைரஸின் தாக்கம் மிக அதிக மற்றும் அடர்த்தியான நாட்டில் அதிகம் இருக்கும் என கருதப்படுகிறது.
சின்னம்மை மற்றும் போலியோ ஆகிய இரண்டு தொற்றுநோய்களை ஒழிப்பதில் இந்தியா உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்தது. எனவே இந்தியாவுக்கு மிகப்பெரிய திறன் உள்ளது.
இந்தியா போன்ற நாடுகள் முன்பு செய்ததைப் போலவே உலகிற்கும் வழி காட்டியாக இருப்பது முக்கியமானது" என கூறினார்.
