இந்த 'அறிகுறி' இருந்தாலும் அது 'கொரோனாவாக' இருக்க 'வாய்ப்பு'... 'ஃபிரான்ஸ்' விஞ்ஞானிகளின் புதிய 'கண்டுபிடிப்பு'... 'ஆய்வு' முடிவை அங்கீகரித்த 'பிரிட்டன்' மருத்துவர்கள்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 24, 2020 12:11 PM

வாசனையை சுத்தமாக அறிய முடியவில்லை என்றால் அது கொரோனா பாதிப்பாக இருக்க வாய்ப்பிருப்பதாக ஃபிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

One of the newest signs of coronavirus-French scientists

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிதாக ஒரு அறிகுறியை கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், போன்றவற்றை மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஃபிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெரோம் சாலமன், கொரோனா தாக்கிய நோயாளிகளை ஆய்வு செய்த போது, வாசனை அறியும் திறனை இழப்பதும் கொரோனாவுக்கான அறிகுறி என கண்டுபிடித்துள்ளார். இந்த ஆய்வின் மூலம் ஏற்கனவே கொரோனாவுக்கான அறிகுறிகளுடன் இதுவும் சேர்க்கப்படுவதாக ஃபிரான்ஸ் மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வின் முடிவை, பிரிட்டன் மருத்துவர்களும் அங்கீகரித்துள்ளனர்.

Tags : #CORONA #VIRUS #FRANCE #NEWEST SIGNS #SCIENTIST