'மளிகை சாமான்' கொடுக்க முடியாது... வீட்டை 'காலி பண்ணுங்க'... 'ஹாஸ்பிட்டல் போங்க...' 'கிட்ட வராதிங்க...' 'ஊரே' சேர்ந்து ஒதுக்கிய 'விமான பணிப்பெண்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 25, 2020 06:24 PM

இண்டிகோ விமான சேவை நிறுவனத்தில் வேலைப் பார்ப்பதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என நினைத்து பெண் ஒருவரை அக்கம்பக்கத்தினரே கடுமையாக தொல்லை கொடுத்து வந்த சம்பவம் மேற்கு வங்கம் மாநில கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது.

IndiGo staffer mother harassed by neighbours suspecting corrona

கொல்கத்தா நகரில் வசிப்பவர் அம்ரிதா சாஹா. இவர் இண்டிகோ விமானத்தில் பணியாற்றி வருகிறார். இவர் விமான நிறுவனத்தில் பணியாற்றுவதால், அம்ரிதாவின் அக்கம்பக்கத்தினர் இவருக்கும், இவரது தாயாருக்கும் கொரோனா தொற்று இருக்கும் என அஞ்சி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், மறுநாளான திங்கள்கிழமை அம்ரிதாவின் தாயார் மளிகை பொருள்களை வாங்கக் கடைக்குச் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு மளிகைப் பொருள் கொடுக்க மறுத்தது மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தினர் அம்ரிதாவின் தாயாரை மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதையெல்லாம் அறியாத அம்ரிதா தனது பணிகளை முடித்துவிட்டு திங்கள்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது ஏராளமானோர் அம்ரிதாவின் வீடு முன்பு கூடி, அவரை வீட்டை காலி செய்யுமாறு கோஷமிட்டுள்ளனர். இதையடுத்து, தனக்கும், தனது தாயாருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி கொல்கத்தா போலீசாரை அம்ரிதா கேட்டுள்ளார். ஆனால் அம்ரிதாவுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் அம்ரிதா பதிவிட்டார். அந்த வீடியோ வைரலானதையடுத்து பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து கொல்கத்தா போலீஸ் அம்ரிதாவின் வீட்டுக்கு விரைந்து, வந்து தங்களால் முடிந்த உதவியைச் செய்வதாகக் கூறினர். மேலும் அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்திலும் ஈடுபட்டனர்.

Tags : #CORONA #KOLKATTA #WESTBENGAL #NEIGHBOUR #HARRASMENT