'குழந்தைக்கு' பேர் சூட்டும் 'விழா'... குழந்தையின் 'காதில்' பெற்றோர் '3 முறை' கூறினர்... 'கொரோனா...' 'கொரோனா...' 'கொரோனா...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 24, 2020 10:09 AM

உத்தரபிரதேசத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியதற்காக இப்பெயர் சூட்டப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.

The baby girl born in Uttar Pradesh has been named \'Corona\'

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 499ஆக உள்ளது. நேற்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 103 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  உ.பி., மாநிலம் கோரக்பூரில் உள்ள சோகவுரா கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, 'கொரோனா' என பெயர் சூட்டியுள்ளனர். குழந்தையின் பெற்றோரின் சம்மதத்துடன் குழந்தையின் மாமா திரிபாதி என்பவர் இந்த பெயரை சூட்டியுள்ளார்.

எதற்காக இப்படி ஒரு பெயரை சூட்டினீர்கள் என கேட்கப்பட்டதற்கு, "உலகில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று வரும் உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் ஆபத்தானதாக இருந்தாலும் அது சில நல்ல பழக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது.  அது உலக மக்களை ஒன்றிணைத்துள்ளது. ஒற்றுமையின் சின்னமாக தீமைகளை எதிர்த்து போராடுபவராக இக்குழந்தை இருப்பார்" என விளக்கமளித்துள்ளார். தற்போது இந்த குழந்தை இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது.

Tags : #CORONA #UTTARPRADESH #GIRL BABY #NAMED CORONA