கொரோனா' பாதித்த 'மதுரை நபர்' ஆபத்தான நிலையில் உள்ளார்... அமைச்சர் 'விஜயபாஸ்கர்' தகவல்...தமிகழத்தில் வைரஸ் 'பரவல்' அதிகரித்துள்ளதாகவும் 'விளக்கம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 24, 2020 04:40 PM

மதுரையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

madurai coronavirus positive patient in critical condition

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 9 பேராக இருந்த கொரோனா தொற்று தற்போது 12 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஒருவர் என மூவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. மற்ற இருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றாலும், மதுரை நபர் வெளிநாட்டுக்குச் சென்றவர் அல்ல.

தமிழகத்தில் இருந்தே அவருக்கு வைரஸ் பாதித்துள்ளது தெரியவந்தது. இதன் மூலம் தமிழகத்தில் வைரஸ் தொற்று சமூக பரவல் என்ற நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று சட்டசபையில் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழகத்தில் சமூக பாதிப்பு அதிகரித்துள்ளதாக பேசியுள்ளார். மேலும், கொரோனா பாதித்த மதுரை நபரின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags : #CORONA #MADURAI #PATIENT #CRITICAL CONDITION #MINISTER #VIJAYABASKAR