எனக்கு இப்போ 'டீ' குடிக்கணும்...! 'டீயை தாமதமாக கொண்டு சென்ற நர்ஸ்...' விரக்தியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த வார்டில் இருந்த நபர் நர்ஸை தாக்கிய சம்பவம் கேரளாவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரசால் அனைத்து மாநிலங்களும் பொது மக்களை தனிமையில் இருக்க வலியுறுத்தி வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் ஒன்றான கேரளத்தில் ஏற்பட்ட சம்பவம் அம்மாநில மக்களை கவலையில் ஆழ்த்தி வுள்ளது.
சமீபத்தில் மஸ்கட்டில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தில் கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் அந்த நபர் தனக்கு டீ வேண்டும் என்று அங்கு பணியில் இருந்த நர்ஸிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
தன்னுடைய பணிகளை முடித்து அவருக்காக டீ கொண்டு வந்துள்ளார். டீ கொண்டுவர தாமதம் ஆனதால் தனிமையின் விரக்தியில் இருந்த அந்த நபருக்கு கோபம் ஏற்பட்ட நிலையில், தாமதமாகச் சென்ற நர்ஸை அவர் தாக்கினார். அதிர்ச்சியடைந்த நர்ஸ், அளித்தபுகாரின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டவர் மீது போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
