'மனைவி' பணம் அனுப்பவில்லை.. பெற்ற 'மகள்களை' பெல்ட்டால் அடித்து.. 'வீடியோ' அனுப்பிய தந்தை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Nov 13, 2019 03:12 PM
மனைவி பணம் அனுப்பாததால் பெற்ற மகள்களை பெல்ட்டால் அடித்து அதனை வீடியோவாக அனுப்பிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சரவா கிராமத்தை சேர்த்தவர் ஈஷா. கடந்த 12 வருடங்களுக்கு முன் இவருக்கும் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மகாலட்சுமி தற்போது துபாய் நாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் அனுப்பும் பணத்தை வைத்து சொகுசாக சுற்றித்திரிந்த ஈஷா, நாளடைவில் மோசமான பழக்கங்களுக்கும் அடிமையாகி விட்டார். இதனை அறிந்த மகாலட்சுமி அவருக்கு பணம் அனுப்புவதை சில மாதங்களுக்கு முன் நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் மனைவி பணம் அனுப்பாததால் ஆத்திரம் அடைந்த ஈஷா தன்னுடைய மகள்கள் இருவரையும் பெல்ட்டால் அடித்து சித்திரவதை செய்து, அந்த வீடியோவை மகாலட்சுமிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்து பதறிப்போன மகாலட்சுமி அந்த வீடியோவை தன்னுடைய உறவினர்களுக்கு அனுப்பி வைக்க, அவர்கள் வந்து சிறுமிகள் இருவரையும் மீட்டு தங்களுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து ஈஷா மீது அவர்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்க, தற்போது காவல்துறை ஈஷா அவரது சகோதரி இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தனேனி வனிதா நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்த குழந்தைகளை சென்று பார்த்து ஆறுதல் அளித்துள்ளார்.
மேலும் சிறுமிகளின் தற்போதைய பாதுகாப்பான நிலைமை குறித்து மகாலட்சுமிக்கும் வீடியோ கால் செய்து தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக வீடியோ பார்த்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.