சட்டவிரோத கடத்தல்...'தங்கச்சுரங்கம்' இடிந்து விழுந்து 30 பேர் பலி!
முகப்பு > செய்திகள் > உலகம்By Manjula | Sep 27, 2019 04:53 PM
சாட் நாட்டில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார் 30 பேர் வரை பலியாகி இருக்கலாம் என,அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் சாட் என்ற குடியரசு நாடு உள்ளது. இந்நாட்டின் லிபிய எல்லை பகுதியான கொவ்ரி ஃபவ்டி நகரில் உள்ள சுரங்கங்களில் தங்கம் இருப்பது கடந்த 2012-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து தங்கத்தை எடுத்து வெளிச்சந்தைகளில் விற்பனை செய்கின்றனர்.
இந்தநிலையில் இதேபோல கடந்த செவ்வாய்க்கிழமை கொவ்ரி ஃபவ்டியில் சட்டவிரோத சுரங்கம் அமைத்து சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தங்கம் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கத்தின் மேல் இருந்த மண் இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் சுரங்கத்தில் வேலைசெய்த அனைவரும் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மஹமத் அபாலி சலா,''இந்த விபத்தில் 30 பேர் வரை இறந்திருக்கலாம்.எனினும் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம்,''என தெரிவித்துள்ளார்.
