'மாநகரப் பேருந்து மோதியதில்'... 'ஒரேநாளில் 2 பெண்கள் பலி'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 26, 2019 11:24 AM

சென்னையில் மாநகரப் பேருந்து மோதியதில், ஒரே நாளில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

government bus hit 2 women died in chennai vadapalani

மதுரவாயல் பாரதிநகரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மனைவி கலைச்செல்வி (36). இவர், கோயம்பேடு மார்கெட்டிற்கு சென்று மொத்தமாக பூ வாங்கி வந்து, தனது பகுதியில் விற்பனை செய்து வந்தார். வழக்கம்போல் கலைச்செல்வி பூக்கள் வாங்கிவிட்டு, பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வடபழனி துரைசாமி சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த 12 பி பேருந்து ஒன்று, திடீரென மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு இருந்த பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய மாநகரப் பேருந்து மற்றும் அதன் ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள், கிண்டி போக்குவரத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதேபோல், கடந்த புதன்கிழமையன்று இரவு, 50 வயதான மீனா என்பவர், பணி முடிந்து வீடு திரும்புவதற்காக, வடபழனி பேருந்துநிலையத்துக்கு வந்தார். அவர் மீது அங்கு வந்த மாநகரப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார். 

ஒரே நாளில் வடபழனி பகுதியில் 2 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வடபழனி துரைசாமி சாலையில் திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதாலேயே, இதுபோன்ற விபத்துக்கள், அப்பகுதியில் நடப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Tags : #CHENNAI #ACCIDENT