வடபழனியில் 'பேருந்து' மோதி கீழே விழுந்த பெண்..சிகிச்சை பலனின்றி பலி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 25, 2019 02:55 PM

வடபழனி பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பேருந்து மோதி கீழே விழுந்த,பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

Woman Dies after collision With Bus in Chennai Vadapalani

வடபழனியில் உள்ள தனியார் சுகாதார மையத்தில் பணியாற்றும் மீனா என்ற பெண் நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது ஆற்காடு சாலை பகுதியில் இருந்து வேகமாக பேருந்து நிலையத்துக்குள் வந்த பேருந்து ஒன்று மீனா மீது மோதியது.இதில் மீனா ரத்த காயங்களுடன் கீழே சரிந்தார்.தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனா சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

வடபழனி பேருந்து நிலையத்தில் சிசிடிவி எதுவும் இல்லாததால் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் பேருந்து எண் ஆகிய விவரங்கள் தெரியவில்லை.எனினும் இந்த வழக்கு குறித்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #ACCIDENT #CHENNAI