‘8-வது மாடியிலிருந்து தவறி விழுந்து’... ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 26, 2019 10:07 AM

சென்னையில் தனியார் அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

youth accidently fallen from 8th floor died in chennai

சென்னை துரைப்பாக்கத்தில் 13 அடுக்கு மாடிகளைக் கொண்ட குடியிருப்பு ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகின்றது. இதில், பல்வேறு ஊர்களை சேர்ந்த ஆட்கள் தங்கி கட்டிடம் கட்டும் பணியை பார்த்து வருகின்றனர். இந்தப் பணியில் திருவண்ணாமலையை சேர்ந்த பரூக் என்பவர், படூரில் தங்கியிருந்து கடந்த 3 மாதங்களாக வேலைப்பார்த்து வந்தார். இந்நிலையில், கட்டிடத்தின் வெளிப்புறத்தில், வர்ணம் பூசும் பணி நடக்க இருந்தது. இதற்காக, சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது 8-வது மாடியில் இளைஞர் பரூக், பாதுகாப்பு கயிறு கட்டாமல் பணியை வேலைப் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து நிலைதடுமாறிய அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார், இளைஞர் பரூக்கின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அங்குள்ள தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #CHENNAI #DURAIPAKKAM