நம்ம லைக்ஸ் மத்தவங்களுக்கு தெரியாதா..? புது சோதனையில் இறங்கிய பேஸ்புக்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Sep 27, 2019 04:52 PM

லைக் ஹைடிங் என்னும் புதிய ஆப்ஷனை பேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook hides likes on posts for trial in Australia

உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனாளர்களை கவரும் வகையில் பல புதிய அப்டேட்களை பேஸ்புக் நிறுவனம் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ‘லைக் ஹைடிங்’ என்னும் புதிதாக ஒரு ஆப்ஷனை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கில் பயனர்கள் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு அவர்களை பின் தொடர்பவர்கள் லைக்ஸ்ஸை பதிவிடும் வசதி உள்ளது. இது பயனர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணங்களை வரவழைப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேஸ்புக்கில் ஒரு பயனர் எத்தனை லைக்ஸ் வாங்கியுள்ளார் என மற்ற பயனர்கள் பார்க்க முடியாத வகையில் ‘லைக் ஹைடிங்’ என்னும் புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தி சோதனை முயற்சிய்ல் பேஸ்புக் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்த சோதனை முதலாவதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது என தகவல் வெளியாகியிள்ளது.

Tags : #FACEBOOK #HIDELIKES #FB