'அதுக்குனு ஒரே நைட்லயா?'.. 'இதான் சான்ஸ்னு' பெண் செய்த காரியத்தால் ஏற்பட்ட சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Sep 19, 2019 06:21 PM
பல் வலிக்காக க்ரீம் பயன்படுத்திய பெண்ணின் ரத்தம் நீல நிறமாக மாறிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கில், 25 வயது இளம் பெண் பல் வலி தாளாமல் இருந்துள்ளார். இந்த தீராத பல் வலியால் எந்த வேலையும் செய்ய முடியாததாலும், சிந்தனை கூட செய்ய முடியாததாலும் அந்த பெண் அவதிப்பட்டுள்ளார். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்கிற நோக்கில், பென்ஸோகெய்ன் எனும் வலி நிவாரணி மருந்தினை வாங்கி ஒரே இரவில் முழுவதையும் காலி செய்து பல்லில் தடவியுள்ளார்.
ஆனால் அடுத்த நாள் எழும்போதுதான், தன் உடலில் நீல நிறம் குடிகொண்டதை உணரத் தொடங்கினார். இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்றபோதுதான் அந்த பெண்ணுக்கு மெதெடோ குளோபினிமியா எனும் நோய்க்குறி தாக்கியுள்ளது தெரியவந்தது. மேலும் அப்பெண்ணின் ரத்தம் நீல நிறமாக மாறியதையும் கண்டுபிடித்து ஆச்சரியமடைந்தனர்.
ரத்த சிவப்பணுக்களின் வடிவம் மாறி திசுக்களுக்கான ஆக்ஸிஜனை வழங்காததால் இவ்வாறு நீலநிறமாக ரத்தம் மாறியதாகவும், இந்நிலை நீடித்தால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதித்து உயிருக்கே ஆபத்து உண்டாகும் என்றும் தெரியவந்தது. அதன் பின்னர் மெத்திலின் ப்ளூ என்கிற மருந்து கொடுத்து இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது.
எனினும் முன்னதாக அப்பெண் பயன்படுத்திய வலி நிவாரணியில், இறைச்சி கெட்டுப் போகாமல் இருப்பதற்கான வேதிமங்கள் சேர்க்கப்படுவதாகவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதனால் 3 பேர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிய்டாகியுள்ளன.