பயமா? எனக்கா?.. தலையில் நெளியும் விஷ பாம்பு.. அசால்ட்டாக செல்லும் போலீஸ்.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 09, 2019 06:21 PM
ஒரு வீட்டினுள் புகுந்த சாரப் பாம்பை காவலர் ஒருவர் அசால்ட்டாக பிடித்து தனது தலைமீதும் உடல் மீதும் போட்டுக்கொண்டு ஒய்யாரமாக, சிரித்துக்கொண்டே நடந்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மேகநாதன். இயற்கை ஆர்வலரான இவர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து அப்பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் என்பதாலும், இவர் அப்பகுதியில் மிகவும் பிரபலமானவராக இருந்து வருகிறார். அதோடு பாம்புகளை பிடிப்பதிலும் வல்லவராம்.
இதுவரை 800க்கும் மேற்பட்ட விஷ பாம்புகளை பிடித்துள்ள மேகநாதன், வழக்கம் போல் ரைடு செல்லும்போது ஒரு வீட்டினுள் பாம்பு புகுந்ததை கேள்விப்பட்டு அங்கு சென்றதுமில்லாமல், பாம்பை பிடித்துள்ளார். அந்த பாம்பு மேகநாதனின் தலைமீதும், உடல் மீதும் சுற்றிக்கொண்டது.
ஆனாலும் அவர் அசால்ட்டாக பாம்பை சுமந்தபடி நடந்து சென்று ஓரமாக காட்டுச் செடிகள் நிறைந்த பகுதியில் இறக்கிவிட்டு வருகிறார். இந்த சம்பவத்தை பார்த்து அந்த ஊரே ஆச்சரியத்தில் உறைந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.