'குளிப்பாட்டும்போது கைய கிழிச்சு ரத்தம் வந்தது'.. பிறந்த குழந்தையின் உடலில் 20 நாளாக இருந்த தடுப்பூசி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 10, 2019 09:41 AM

மேட்டுப் பாளையத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசி அகற்றப் படாமல் இருந்துள்ளது, 20 நாள்கள் கழித்து தெரிந்ததை அடுத்து இந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

staff nurse forgot to remove vaccine from a newborn

கோவையின் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் - மலர்விழி தம்பதிக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி மலர்விழிக்கு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.

பிறந்த குழந்தைக்கு போடப்படும் தடுப்பூசி, குழந்தை பிறந்த அடுத்த நாளான 21-ஆம் தேதி போடப்பட்டது. 31-ஆம் தேதி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் மலர்விழி. ஆனால் வீட்டுக்குச் சென்று குழந்தையினை , மலர்விழி குளிப்பாட்டும்போது, அவரது கைகளில் ஏதோ பட்டு கையில் ரத்தம் வரவே, சந்தேகப்பட்டு என்னவென்று பார்த்திருக்கிறார்.

அப்போதுதான், குழந்தையின் இடது கை மற்றும் இடது தொடையில் போடப்பட்ட தடுப்பூசிகளில், குழந்தையின் இடது தொடையில் போடப்பட்ட தடுப்பூசியை செவிலியர்கள் கவனக்குறைவால், அகற்றாமல் விட்டுவிட்டதைக் கண்டு மலர்விழி அதிர்ந்தார். இதன் காரணமாகத்தான் குழந்தையின் தொடையில் வீக்கம் உண்டானதோடு, நாளடைவில் வீக்கம் அதிகரித்துக்கொண்டே சென்றிருக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.

அதன் பின்னர் மேட்டுப்பாளையம அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடமும், எம்.பி, எம்.எல்.ஏ உள்ளிட்ட ஏனையோரிடமும் மலர்விழியின் தரப்பில் இருந்து, செவிலியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : #HOSPITAL #COIMBATORE #NURSE #MEDICAL #NEWBORN #BABY