‘ஒரு மாத குழந்தையுடன் வந்த இளம் தம்பதி’.. ‘ஓடும் ரயிலில் செய்த அதிர்ச்சிக் காரியம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 12, 2019 01:51 PM

கிருஷ்ணகிரி அருகே ஜோலார்பேட்டை செல்லும்  ரயில்வே வழித்தடத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 3 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Couple commits suicide with 1 month old baby near Salem

சேலம் - ஜோலார்பேட்டை செல்லும் ரயில்வே வழித்தடத்தில் இன்று காலை வழக்கம்போல ஊழியர்கள் தண்டவாள பரிசோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பச்சிளம் குழந்தை உட்பட 3 பேரின் சடலம் இருப்பதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக இதுபற்றி ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் சேலம் ரயில்வே போலீஸாருக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சடலமாகக் கிடந்த இளைஞரின் சட்டைப்பையில் விஜயன் (26) என்ற பெயரில் மருத்துவமனை ரசீது ஒன்று இருந்துள்ளது. மேலும் உடன் இருந்த பெண்ணிற்கு 25 வயது இருக்கலாம் எனவும், குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தம்பதியான இவர்கள் நள்ளிரவில் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

Tags : #SALEM #KRISHNAGIRI #TRAIN #BABY #YOUNGSTER #WOMAN #SUICIDE